தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட டி.ஆர்.பி. ராஜா மற்றும் இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்கள் மனோ தங்கராஜ், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சர்களிடமும் கட்சிக்காரர்களிடமும் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த நேர்காணலின் எழுத்துவடிவம் கீழே:

“தமிழக அமைச்சரவை மாற்றம் முன்கூடியே நடந்திருக்க வேண்டும். சில அமைச்சர்கள் மீது புகார் இருந்தது. சில அமைச்சர்கள் செயல்படவில்லையெனக் கூறப்பட்டது. உளவுத் துறை மூலமாக இதெல்லாம்
செயல்படவில்லையெனக் கூறப்பட்டது. உளவுத் துறை மூலமாக இதெல்லாம் முதலமைச்சருக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அப்போதே அமைச்சரவையை மாற்றியிருந்தால் சாதாரணமாக போயிருக்கும். இப்போது பி.டி.ஆரின் ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதால், விவகாரம் வேறு மாதிரி பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்தச் சர்ச்சையில் சிக்கிய பி.டி.ஆரை மாற்ற வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை