சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? – பிபிசி கள நிலவரம்

சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? – பிபிசி கள நிலவரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியிருக்கிறார். கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, சீட் கொடுக்க எதிர்ப்பு, அ.தி.முக-பா.ஜ.க எதிர்முனைப் போட்டி எனக் கடும் நெருக்கடியை அவர் சந்திக்கிறார். சிவகங்கை மக்கள் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் சிவகங்கை தொகுதி முழுவதும் சுற்றி வாக்காளர்களிடம் பேசியது. சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. இந்தியாவிற்கு நிதி அமைச்சரைக் கொடுத்த…

Read More

ம.தி.மு.க. தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க வைகோவின் இந்த முடிவுகள்தான் காரணமா?

ம.தி.மு.க. தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க வைகோவின் இந்த முடிவுகள்தான் காரணமா?

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி,…

Read More

பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?

பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?

ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (எம்இஐஎல்) பாஜகவுக்கு ரூ.584 கோடி நன்கொடை அளித்துள்ளது. அந்த நிறுவனம் தனது மொத்த நன்கொடையில் 60 சதவீதத்தை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நன்கொடையாளராலும் வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடை இதுவாகும். இது தவிர, தெலுங்கானாவில் கேசிஆர் கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு 195 கோடி ரூபாயை மேகா நிறுவனம் வழங்கியது. இந்தத் தொகை அவரது மொத்த நன்கொடையில் 20 சதவீதமாகும். தமிழ்நாட்டில் திமுக அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.85 கோடி பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் காங்கிரசுக்கு ரூ.110 கோடியும், பாஜகவுக்கு…

Read More

புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக – வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக – வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார். சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத…

Read More

‘இலவச ரேஷன்’ பணம் வருவது எப்படி? பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?

‘இலவச ரேஷன்’ பணம் வருவது எப்படி? பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?

“இப்போது நம் நாட்டில் இலவச பொருட்களை விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கும் கலாசாரத்தை கொண்டு வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இலவச கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச பொருட்களை வினியோகம் செய்து பொதுமக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாசாரத்தை அகற்ற வேண்டும்.” 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட இந்த அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்தன. “வேறு யாரோ (அரசியல் கட்சி) கொடுத்தால் அது தவறு. ஆனால் அவர்கள் (மோதி அரசு) விநியோகித்தால் அது வைட்டமின் மாத்திரைகள்…” மக்களுக்கு இலவச பொருட்களையோ…

Read More

பிரதமர் மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?

பிரதமர் மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?

வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கோவை நகரில் வாகனப் பேரணி நடத்த பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை காவல்துறையினர் பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பா.ஜ.க-வினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்? இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி, நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் பரப்புரையை துவங்கியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், தனது பரப்புரையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இன்று (வெள்ளி, மார்ச் 14) மதியம் கன்னியாகுமரியில்…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் – பெரும்பான்மை பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் – பெரும்பான்மை பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர். நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர். இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, “டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில்…

Read More

கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா தமிழ்நாடு? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மையா?

கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா தமிழ்நாடு? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மையா?

இந்த ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? ஒரு மாநிலம் எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம்? தமிழ்நாட்டின் 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 19, திங்கள், தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை ஒட்டி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறை 49,278.73 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 % இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் மாநில அரசு 1,55,584.48…

Read More

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு – பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு – பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

பஞ்சாப், மேற்கு வங்கத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் இந்தியா கூட்டணியின் நிலை குறித்து தேசிய அரசியலில் கடந்த 2 நாட்களாக நீடித்த விவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசும், சமாஜ்வாதியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி உ ள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும் போட்டியிடும். உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் நிலை குறித்த சர்ச்சை எழக் காரணமாக அமையும் அளவுக்கு அகிலேஷ் யாதவ் என்ன பேசினார்? அடுத்த இரண்டே நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது எப்படி? காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் என்ன பேசினர்? உத்தரபிரதேசத்தில் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வை காங்கிரஸ்…

Read More

இந்துத்வா அரசியல்வாதியான மோதியுடன் இஸ்லாமிய நாடுகள் நட்பு பேணுவது எப்படி?

இந்துத்வா அரசியல்வாதியான மோதியுடன் இஸ்லாமிய நாடுகள் நட்பு பேணுவது எப்படி?

பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டு நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலைத் திறந்து வைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கான நிலம், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமத் பின் சயீத் அல் நஹ்யானால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோவில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோதிக்கு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அறுபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் முன் உரையாற்றியுள்ளார் பிரதமர் மோதி. இதனை தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாடு 2024 இல்…

Read More
1 2 3 171