முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6 ரன்களிலும் பில் சால்ட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பக்கம் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் (128 பந்துகள்)…

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம்; தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம்; தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது.  துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. துவக்க ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. எனினும், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அதிரடியாக ஆட சிரமப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன. அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருந்தன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.  லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட…

Read More

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 40-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் போல்டு ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன்…

Read More

சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் மாலை 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. ஆனால், சார்ஜாவில் போட்டி நடைபெறும் மைதானத்தில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Read More

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.  23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005  ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறமாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர். இந்த போட்டியில், 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி கண்டுள்ள பூனியா, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Read More

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

டோக்கியோ, 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆடவர் ஆக்கி அணி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி…

Read More
1 2 3 15