இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார். டோக்கியோ, 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8வது நாளான மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர். இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

Read More

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ்…

Read More

கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை

கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை

மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லாத அவர் சென்னையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கொரோனா கட்டுப்பாட்டு பயோ பப்பிள் வரம்புக்குள் கிரண் மோரே இருந்தார். மும்பையில் நடந்த ஆயத்த முகாம்களிலும் அவர் பங்கேற்றார். இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருணாள் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். வரும் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக அவர்கள் கடந்தவாரம் சென்னைக்கு வந்தனர். கிரண் மோரேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மற்ற வீரர்களின் உடல்…

Read More

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த 4வது நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல பிரசாத் உதவினார். இதனை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் பெருமையுடன் கூறியுள்ளார். இதேபோன்று பிரசாத் பற்றி முன்னாள் கேப்டன் அட்டப்பட்டுவும் புகழ்ந்து கூறியுள்ளார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்து கொண்டு பந்து வீச்சை…

Read More

ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது

ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது

‘இந்திய அணியில் கோஹ்லி இல்லை, இனி அவ்வளவு தான், தொடரை முழுமையாக தோற்கும்,’ என பலரும் ஏளனமாக பேசினர். தற்போது தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது நாள் முடிவில் 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட்டுகளுடன் வலுவாக இருந்தது. மூன்றாவது நாள் போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் அனைவரும் நடையை கட்ட, மூன்றாவது நாளில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னுக்கு சுருண்டது. டெஸ்ட் அரங்கில்…

Read More

கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

மாரடோனா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனா 60. நான்கு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார்.கடந்த அக்டோபர் மாதம் கொரோனா சோதனையில் தேறினார். இருப்பினும் மது சார்ந்த தொல்லைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த நவ. 3ம் தேதி பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் மாராடோனா மூளையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. உறைந்திருந்த ரத்தத்தை வெற்றிகரமாக அகற்றிய பின், நவ. 11ல் வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது உடல் காசா ரொசாடாவில் உள்ள…

Read More

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார். கவுதம் கம்பீரின் மனிதநேயம் மிக்க செயலுக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (49) இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான பின்பு இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட அப்பெண் கவுதம் கம்பீர் நண்பர் ஒருவர் மூலமா கம்பீர் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். சரஸ்வதி…

Read More

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர். ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரரும், 5 முறை என்.பி.ஏ., சாம்பியனுமான கோப் பிரயன்ட்(41) தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாயினர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு போட்டியில் விளையாடி முடித்தபின் வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அவசரகால படையினர் முற்பட்டனர். ஆனால் யாரையும் காப்பாற்ற…

Read More

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது. வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இந்தத் தொடரை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். 31வது ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவுக்காக நிலைத்து நின்று விளையாடி, அதிகபட்ச ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். குல்தீப் யாதவின் பந்து வீச்சில் பௌல்டு அவுட் ஆகி அவர் பெவிலியன் திரும்பினார். இந்தியாவுக்காக ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதலில்…

Read More
1 2 3 4 15