இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு பிரதமர் மோடியின் அரசு அனுப்பி வைத்தது. மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஜாமீர் நாயக் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2016 -ம் ஆண்டு…

Read More

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களின் மூலம் நோய்த்தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

திராவிடர் கழகத் தலைவர் ” ஓசி சோறு ” கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவுகிறது. மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக…

Read More