‘இலவச ரேஷன்’ பணம் வருவது எப்படி? பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?

“இப்போது நம் நாட்டில் இலவச பொருட்களை விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கும் கலாசாரத்தை கொண்டு வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இலவச கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச பொருட்களை வினியோகம் செய்து பொதுமக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாசாரத்தை அகற்ற வேண்டும்.”

2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட இந்த அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்தன.
“வேறு யாரோ (அரசியல் கட்சி) கொடுத்தால் அது தவறு. ஆனால் அவர்கள் (மோதி அரசு) விநியோகித்தால் அது வைட்டமின் மாத்திரைகள்…”

மக்களுக்கு இலவச பொருட்களையோ பணத்தையோ வழங்குவதன் மூலமான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் குறித்த ஊடக விவாதங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வாதங்களை முன்வைப்பதை அடிக்கடி காணலாம் மற்றும் கேட்கலாம்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதை ஒரு தீவிரமான பிரச்னை என்று குறிப்பிட்டது. ஏழைகளுக்கு இலவசங்களை வழங்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரியில் தனது பட்ஜெட் உரையில் நடப்பு நிதியாண்டில் இலவச ரேஷன் திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கூறினார்.

இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2028 வரை தொடரும் என்று 2023 நவம்பரில் நரேந்திர மோதி அரசு அறிவித்தது.

நிதியமைச்சரின் பட்ஜெட் மதிப்பீட்டை அடிப்படையாக எடுத்துக் கொண்டால், இந்தத் திட்டத்தால் அரசின் கருவூலத்துக்கு ஏறக்குறைய 10 லட்சம் கோடி ரூபாய் சுமை ஏற்படும்.

இந்த திட்டம் 2020 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது, அதன் பிறகு அதன் காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் காலக்கெடு 2028 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.