சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 40-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் போல்டு ஆனார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத் அணி பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார்.அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.