சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 40-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் போல்டு ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன்…

Read More

தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!

தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!

தி.மு.க.,வில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம், கட்சி தலைமை, 5 கோடி ரூபாய் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், போட்டியிட வாய்ப்பு கேட்டு, ஒவ்வொரு தொகுதியிலும், பலர், கட்சி தலைமைக்கு மனு அளித்துள்ளனர். சிலர், கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் சிபாரிசில், போட்டியிட முயற்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், தலைமைக்கு, 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன், தங்களின் தேர்தல் செலவுக்கு,…

Read More

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

ஜனவரி 1ஆம் தேதி புது கட்சி துவங்கி தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜன., மாதம் கட்சி துவக்கப்போவதாகவும், இதற்கான தேதி டிச.,31ல் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், இன்று மாலை அவர் காலமானார். இது தொடர்பாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: டாக்டர்களின் கடுமையான முயற்சி, இந்திய மக்களின் பிரார்த்தனைக்கு பிறகும், எனது தந்தை பிரணாப்…

Read More

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா – சீனா எல்லை பதற்றம்

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா – சீனா எல்லை பதற்றம்

லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் இன்று ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார் போது, வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு – ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்த்து நிற்க, படைக்கு உதவுகின்றன என்று பொருள்தரும் இந்த திருக்குறளை இன்று மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பலகீனமாக…

Read More

சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. ‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும்…

Read More

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. வுஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ள நிலையில், அந்தத் தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 150 மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை…

Read More

அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

இராக்கில் செயல்பட்டு வந்த தங்களின் ராணுவத் தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களில் இராக் மற்றும் இரானில் நடந்த 10 முக்கிய விஷயங்களை இங்கு தொகுத்துள்ளோம். இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த குறைந்தது இரண்டு ராணுவ தளங்கள் மீது இரானில் இருந்து டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட…

Read More

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற  தீர்மானத்திலிருந்து நான்  பின்வாங்கமாட்டேன்  முல்லைத்தீவில்  ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்….

Read More
1 2 3