போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்….
Read More









