‘நடிக்கத் தெரியாது’ என்று விமர்சிக்கப்பட்டவர் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ ஆக மாறிய கதை
“இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள்.
நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று.
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் சென்னையில் ஜூன் 22-ஆம் தேதி 1974- ஆம் ஆண்டு, மகனாக பிறந்தவர் தான் ஜோசஃப் விஜய்.
