நிலாவில் என்ன செய்யப் போகிறது? – முழு விவரம்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான முயற்சியின் தொடக்கப்புள்ளியாக இன்று சந்திரயான்-3 விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இன்று (ஜூலை 14, வெள்ளிக்கிழமை) மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து செல்லும் எல்விஎம்3 எம்4 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதைக் காண பெருந்திரளான மக்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டிருந்தனர்.
ராக்கெட் விண்ணை நோக்கிப் பறக்க ஆரம்பித்ததும் மக்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சோம்நாத், ‘எல்விஎம் 3-எம்4 ராக்கெட் சந்திரயான் 3 விண்கலத்தை துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்விஎம் 3-எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
