உத்தரபிரதேசத்தில் எந்த சாதியினர் யாருக்கு வாக்களித்தனர்?
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ‘இந்தியா’ கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்தக் கூட்டணி உயர் சாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 75 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகள் ஐந்து இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
75 இடங்களில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களையும், அப்னா தளம் (சோனேவால்) ஓரிடத்தையும் வென்றன.
மறுபுறம் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது.
பொது அல்லது முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களான பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், வைசியர்கள் பெரும்பாலும் பாஜகவை ஆதரித்தனர், அதே சமயம் பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியல் சாதியினர் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு முன்னுரிமை தந்தனர் என்று லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் அமைப்பின் தேர்தலுக்கு பிந்தைய கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
