டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி

தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார். டொனால்ட் டிரம்ப்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 39 வயதான வான்ஸ், துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் உஷா சில்லுக்குரி.

இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பெற்றோரின் மகளான உஷா, கலிஃபோர்னியாவின் சான்டியாகோவின் புறநகரப் பகுதியில் வளர்ந்தவர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு அரங்கில் ஜே.டி. வான்ஸ் நடந்து வந்தபோது அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து அங்கிருந்த ஏராளமானோர் புகழ்ந்து பேசினார்கள்.

ஆனால், ஒஹையோவின் செனட்டரும், குடியரசு கட்சி தேர்வு செய்யப்பட்ட இவரோ தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மனைவி உஷா வான்ஸ் தான் காரணம் என்று கூறுகிறார். உஷாவின் உயர்ந்த தகுதிகளைக் கண்டு வாழ்வில் பணிவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஜே.டி.வான்ஸ்.
38 வயதான உஷா, அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ்.

“நான் ஜே.டியை நம்புகிறேன். அவரை உண்மையாக நேசிக்கிறேன். எங்களின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று கடந்த மாதம் நடைபெற்ற ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் குறிப்பிட்டார் உஷா.