ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ

காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை இந்திய அரசியலில் இருந்து நீக்க ஆசைப்படுகின்றனர். இது நடக்காது. காரணம் இந்திய மக்கள் மோடி பக்கம் உள்ளனர். இரு தரப்பும் விரக்தியிலும் உள்ளன, மேலும் ஒரே எண்ணம் கொண்டதாக உள்ளன. இந்தியாவில் ராகுல் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தானும், ஊழலையும் வாரிசு அரசியலையும் விரும்புபவர்களும் தான் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பத்ரா கூறினார்.

Read More

ஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு

ஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் மீது ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்துள்ளார். அவர் பேசுகையில், காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததாக நான் கூறிய குற்றச்சாட்டிற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. நான் ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறுகிறார். ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதற்காக என் மீது வழக்கு தொடர போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் இதுவரை வழக்கு தொடரவில்லை. நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்திற்குள் என் மீது…

Read More

2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு

2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு

2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். புதுடில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய தி்டட்டத்திற் கான அடிக்கல் நாட்டு வுிழா இன்று துவங்கியது. அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட உள்ளது. 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறன்களை வளர்க்க இந்த மையம் அமையும். இது இந்தியாவின் சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும்.ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியகத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தற்போது இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக 2.6…

Read More

” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்

” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும் திணிப்பது இல்லை என டில்லியில் நடந்த எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கில் தலைவர் மோகன்பகவத் பேசுகையில் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்த இயக்கத்தின் தரத்திற்கு இணையாக வேறு இயக்கம் இருக்க முடியாது. எங்கள் கொள்கையை யாருக்கும் திணிக்கவில்லை. கொள்கையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.,இன்று வரை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாட்டின் கட்டமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறோம். மக்களை இணைத்து செல்லவே விரும்புகிறோம். சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பலத்தை நிரூபிக்கிறது. சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே…

Read More

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,…

Read More

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அவை போலியானவை என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார். யாத்ரீகர் ஒருவருடன் ராகுல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலின் நிழல் இல்லை எனக்கூறிய அவர், இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதைப்போல பா.ஜனதா மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர். பா.ஜனதாவினரின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கைலாஷ் மலைக்கு…

Read More

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில், 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், ஹர்திக் படேலின் உடல் நிலை மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஹர்திக் படேல், 25. இவர், ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ‘குஜராத் மாநிலத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், படேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இவர், ஆக., 25ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாதில் உள்ள, தன் பண்ணை வீட்டில், போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இன்று(செப்.,7) 14வது நாளாக போராட்டம்…

Read More

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

விமானத்தில் பா.ஜ.,விற்கு எதிரான கோஷம் எழுப்பிய சோபியா என்ற மாணவியின் போராட்ட பின்னணி குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பா.ஜ., தலைவர் தமிழிசை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது அவரை விமர்சித்த, தூத்துக்குடியை சேர்ந்த பெண் சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கனடாவில் படித்து வரும் சோபியா தனது பெற்றோர்களுடன் விமானத்தில் பயணித்த போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் சோபியா 28. கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக பயின்றுவந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அவரை தந்தையும், தாய் மனோகரியும் சென்னை சென்று விமானத்தில் அழைத்துவந்தனர். பெற்றோர்கள்…

Read More

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த, எழுத்தாளர் வரவர ராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ‘இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்புஉள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு…

Read More

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும். அது வரை முழு வீச்சில் போராட வேண்டும் என்றார்.இதற்குக் காரணம், மறைந்த கருணாநிதிக்கு சென்னையில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு வருமாறு பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை அழைத்து வர வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மூலம், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டில்லி சென்று, அமித் ஷாவிடமே பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதாக, அமித்ஷா ஒப்புக் கொண்டார். பின், முடிவை மாற்றிக் கொண்டார்.இதனால், பா.ஜ., மீது தி.மு.க.,…

Read More
1 104 105 106 107 108 181