18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு வழங்கினார். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறி இருந்தனர். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…
Read More









