ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது….

Read More

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு – அறிவிப்பால் பரபரப்பு

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு – அறிவிப்பால் பரபரப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்ட சித்து ராம்கஞ்ச் மண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியையும், உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து இந்து யுவவாகினி அமைப்பு சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. ‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து யுவவாகினி ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை…

Read More

புனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி?

புனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி?

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிர மாநிலத்தின், புனே லோக்சபா தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க, பா.ஜ., முடிவு செய்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, பா.ஜ., – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, புனே லோக்சபா தொகுதியில், 2019 தேர்தலில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், 51, என்பவரை, பா.ஜ., சார்பில் களமிறக்க, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது, புனே லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, அனில் ஷிரோல் உள்ளார்.இது…

Read More

பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு

பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு

சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு…

Read More

‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கலாம்!

‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கலாம்!

‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட, ‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெறலாம்’ என, பா.ஜ., அறிவித்து உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில், மீண்டும் வலுவான ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,நமோ மொபைல் ஆப் மூலம், மோடியையும், பொதுமக்களையும் இணைக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தனிப் பட்ட நமோ ஆப் மூலம், பொதுமக்கள் யார் வேண்டு மானாலும், கட்சிக்கு நன்கொடை வழங்கலாம். குறைந்தபட்சம், ரூ.5 ம், அதிக பட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும்…

Read More

இந்தியா இருக்கும் நிலையில், 3000 கோடி ரூபாய் செலவில் ஏன் ஒரு சிலை என்று சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி!

இந்தியா இருக்கும் நிலையில், 3000 கோடி ரூபாய் செலவில் ஏன் ஒரு சிலை என்று  சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி!

கடந்தவாரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை, அதாவது 183 மீட்டர் உயரமுள்ள சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தது, நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கான செலவு 3000 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டது. மேலும் இந்த சிலை சீனாவில் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் அறிந்ததே. இப்போது நாடு இருக்கும் நிலையில், எதற்கு இவ்வளவு செலவில் ஒரு சிலை என்று மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் மத்திய அரசின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை…. வரப்போவதுமில்லை. தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், இந்த சிலைக்கான நிதி என்பது பொதுத்துறை…

Read More

பாலக சேத்திர கோவிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது

பாலக சேத்திர கோவிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு சபரிமலையில் போலீசார் மேற்கொண்டுவரும் கெடுபிடிகளால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் கடும்…

Read More

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது. சந்திரபாபு நாயுடு கடந்த எட்டு ஆண்டுகளாக தானாக முன் வந்து ஆண்டுதோறும் தனது குடும்ப சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பு விவரத்தை சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் நேற்று மாலை வெளியிட்டார். தேசிய அளவில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. இந்த சங்கம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு தான். அவரது…

Read More

சபரிமலையில் பொன்.ராதா தடுத்து நிறுத்தம் : பா.ஜ., கண்டனம்

சபரிமலையில் பொன்.ராதா தடுத்து நிறுத்தம் : பா.ஜ., கண்டனம்

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர் போராட்டங்கள் காரணமாக சபரிமலை கோயிலை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன், நாகர்கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார். நிலக்கல் பகுதியில் இன்று காலை அவரது காரை, கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பொன்.ராதா, போலீசாரிடம் கேள்வி கேட்டார். பிறகு பொன்.ராதாவின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என போலீசார் மறுத்து விட்டனர். இதனால் போலீசாருக்கும், பொன்.ராதா ஆதரவாளர்களுக்கும்…

Read More

கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு

கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இன்று(நவ.,20) வழக்கம் போல் தலைமை செயலகம் வந்தார். அங்கு ஒரு மர்மநபர் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு ஓடியுள்ளார். இதில் கெஜ்ரிவாலுக்கு எந்த பாதிப்பும் இல்லை . போலீசாரை மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் அனில் சர்மா, மிளகாய்பொடியை ஒரு தீப்பெட்டியில் கொண்டு வந்ததாக தெரிகிறது. டில்லியில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால் சில அரசியல் காரணங்களு்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆவேசமுற்ற ஒரு தொண்டர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார். மேலும் கெஜ்ரிவால் மீது சிலர் கறுப்பு மை வீசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கெஜ்ரிவால் மீது…

Read More
1 101 102 103 104 105 181