தொல்லை தரும் மூத்த தலைவர்கள்:சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. கதறல்

தொல்லை தரும் மூத்த தலைவர்கள்:சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. கதறல்

மூத்த தலைவர்கள் தொல்லை தருகின்றனர்,தனது குடும்பத்தினர் மீது போலீசார் பொய் வழக்கு பதிந்து துன்புறுத்துவதாக சட்டசபையில் கண்ணீர்விட்டு அழுதார் பெண் எம்.எல்ஏ., மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். சிமாரியா தொகுதி பா.ஜ. பெண் எம்.எல்.ஏ. நீலம் அபய் மிஷ்ரா. இன்று சட்டசபை கூட்டத் தொடரின் பூஜ்ஜிய நேரத்தின் போது, எழுந்து நின்று, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் கட்சியின் முக்கிய தலைவர் துன்புறுத்தல் கொடுக்கின்றனர். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகின்றனர். என்ற கூறியபடி கதறி அழதார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் எம்.எல்.ஏ.யின் அழுகையை பார்த்து பொங்கியெழுந்த , எதிர்க்கட்சியான காங் எம்.எல்.ஏ.க்கள் அபய் மிஷ்ராவுக்கு…

Read More

பிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்

பிரணாப் நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய அதிக விண்ணப்பம்

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் தெரிவித்ததாவது: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்ட பின், எங்கள் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த நிகழ்வுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய, சராசரியாக தினமும் 350 விண்ணங்கள் வந்து கொண்டிருந்தன. பிரணாப் கலந்து கொண்ட பின், தினமும் 1,200 முதல் 1,300 விண்ணப்பங்கள் வரை வருகின்றன. இதில் பெரும்பாலன விண்ணப்பங்கள், பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., மீதான நம்பிக்கை அதிகரிப்பே, இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர்…

Read More

ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, தமிழர்களுக்கு பாதிப்பையே தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி

ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை,  தமிழர்களுக்கு பாதிப்பையே  தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரு சுமந்திரன் தொடந்து கருத்துக் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம். இலங்கை தொடர்பாக, ஐ.நா. மனித…

Read More

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மந்திரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு யோகா செய்தார்கள். மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேசுகையில், நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை…

Read More

காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால் மெகபூபா நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து, இன்று காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் – தேசியமாநாட்டு காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது, தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமைந்தது. 28 தொகுதிகளை பிடித்து மக்கள் ஜனநாயக கட்சி முதலிடம் பிடித்தது. ஆட்சியமைக்க போதிய பலமான 44 உறுப்பினர்கள் எந்த கட்சியிடமும் கிடையாது. மோடி அலை மற்றும் ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு காரணமாக ஜம்மு பிராந்தியத்தில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. ஆனால் பாகிஸ்தான்…

Read More

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் மீதான விசாரணை முடியும் வரையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி(சி.இ.ஓ.,) சந்தா கோச்சார், 56. இவர், விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்துக்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக, இவரது கணவரின் நிறுவனத்துக்கு, வீடியோகான் நிறுவனம், சலுகை அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சந்தா கோச்சார் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை சுதந்திரமாக நடக்கும் வகையில், விசாரணை முடியும் வரை, அவர், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமத்தின், ‘லைப் இன்ஷூரன்ஸ்’ பிரிவு தலைவர், சந்தீப் பக்சி, வங்கியின்…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களைநோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

Read More

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. டெல்லி அமலாக்கப்பிரிவு கூடுதல் நீதிபதி ரூபி அல்கா குப்தா முன் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், அவர் குற்றம்சாட்டுவோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் தவிர்த்து, தனியார் நிறுவனமான அட்வான்ட்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ், அதன் இயக்குநர் அண்ணாமலை பழனியப்பா ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு4-ன்கீழ் குற்றப்பத்திரிகை…

Read More

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர் உறவினர், மெஹுல் சோக்சியும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். நிரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம், நிரவ் மோடிக்கு ஜாமினில் வெளியே வர…

Read More

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழல் செய்யாதோர்; பிற தலைவர்களை பற்றி, அவ்வாறு கூற முடியாது,” என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஊழல்,செய்யாதது,மோடி, ஆதித்யநாத்,மட்டுமே உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரிஜ் பூஷண் சரண் உள்ளார். இவர், காங்., தலைவர், ராகுலை, ‘குரைக்கும் நாய்’ என, விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில், கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பிரிஜ் பூஷண் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர்,…

Read More
1 108 109 110 111 112 181