காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
காரைக்கால் மற்றும் நெடுவாசலில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன் வாயு) எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காரைக்கால் பிராந்தியத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அறிவிப்பு வரவில்லை. கடிதமும் வரவில்லை. இது மத்திய…
Read More









