கூவத்தூர் தனியார் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக பிரிப்பு? – தம்பிதுரை சமாதான பேச்சு
தமிழக முதல்வராக பதவியேற் றுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளதால், கூவத்தூர் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக் களை, தனியாக பிரித்து அவர் களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களால் கூவத்தூர் விடுதி தினமும் பரபரப்பாக இருந்து வருகிறது….
Read More









