சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அதேசமயம் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கேற்ப, அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது…

Read More

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

தமிழக முதலமைச்சராக சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டிருந்த வேளையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.  இதனையடுத்து கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை ஆளும் கட்சி தலைவர் தான் முதலமைச்சராக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க வைக்குமாறு தமிழக ஆளுநருக்கு கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களின் ஒப்புதல் பெறப்பட்ட கடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் சர்ச்சையில் இருக்கும் போது இந்த புதிய முதலமைச்சருக்கான எம்எல்ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்ட கடிதத்தை ஆளுநர் எப்படி பரிசீலிப்பார் என்பதை பொறுத்திருந்து தான்…

Read More

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்ப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க போட்டி நடந்துக்…

Read More

எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு, ஒவ்வாமை சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவு

எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு, ஒவ்வாமை சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவு

கூவத்தூர் விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு, ஒவ்வாமை ஏற்பட்டது இதை தொடர்ந்து விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைந்து உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில், ஆளும் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.ஆனால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. வில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஓ.பன் னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தற்காலிக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். சசிகலா தரப்பினர்…

Read More

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் -முதல்-அமைச்சர் அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றார். அங்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் டி.கபிலன், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சந்தித்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர், மாதா நகர் 10வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின்…

Read More

முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

தான் தமிழக முதல்வராக வேண்டுமென முடிவு செய்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கம் காட்டியதே காரணம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர், அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார் எனவும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இன்று (திங்கள்கிழமை) தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார். முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்றே அதிமுகவை உடைக்கும் சதித்திட்டமும் செயல்படத் தொடங்கிவிட்டது. அதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதன் காரணமாகவே இரவோடு இரவாக ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என்றேன். அப்போதுகூட, ஓபிஎஸ் உட்பட அனைவருமே நான்தான் முதல்வராக வேண்டும்…

Read More

சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு  வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை…

Read More

ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை

ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு: பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள 35 தமிழக மீனவர்களை யும், அவர்களுக்குச் சொந்தமான 120 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் பிப்ரவரி 7-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சம்பவத்தை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் 7 பேர் ராமேசுவரம் கடல் பகுதியில் இயந்திரப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, படகு தத்…

Read More

சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள்- ஜெ. தீபா

சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள்- ஜெ. தீபா

சென்னை: சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக சாடியுள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா, தமிழக முதல்வர் பதவியிலும் உட்கார இருப்பதை ஏற்க முடியாத நிலையில் கொந்தளிப்புடன் இருக்கின்றனர் பொதுமக்கள். இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செய்தியாளர்களை சந்தித்தார்….

Read More
1 170 171 172 173 174 181