ஜல்லிக்கட்டு போராட்டங்களை தடுக்கக்கூடாது: போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்யக்கூடாது என்று போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பி.வினோத்குமார், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனு விவரம்: எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறோம். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 2014-ம் ஆண்டு வரை பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டு விளையாட்டு விமரிசையாக நடைபெற்று வந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் காலம் காலமாக பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல்…
Read More









