சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம்
சென்னை: அதிமுக பொதுச் செயலராக உள்ள வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) அல்லது 9-ஆம் தேதி பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய அந்த கட்சி எம்எல்ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால்,…
Read More









