திருப்பரங்குன்றத்தில் மோதும் ஓபி,ஐபி: வெற்றிக்கனியை பறிக்கும் கட்டாயத்தில் அதிமுக – திமுக
திருப்பரங்குன்றத்தில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும்,திமுகவில் ஐ.பெரியசாமி தலை மையிலும் தேர்தல் பணிக்குழு அமைக்கப் பட்டுள்ளதால் தீபாவளியை விஞ்சும் வகையில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர்,அரவக்குறிச்சி,திருப்பரங் குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சோர்ந்து போய் உள்ள அதிமுகவினருக்கு தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலில் இந்த 3 தொகுதிகளின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தொகுதிகளில் வென்றால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் இருக்கின்றனர். அதனால்,3 தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்நோக்கியுள்ளதால் வெற்றிக்கான நெருக்கடியில் திமுக,அதிமுகவினர் உள்ளனர். அரவக்குறிச்சியில் முன் னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி,திமுகவில் கே.சி.பழனிச்சாமி போட்டி யிடுவதால் ஆரம்பத்தில்…
Read More









