காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்

காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்

‘உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறுமையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.நா., எச்சரித்துள்ளது. ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, தற்போது 1.5 டிகிரியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Read More

ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்…

Read More

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதுடன் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால் மட்டுமே பாக்.குடன் பேச்சு நடத்த முடியும்’ என பலமுறை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிவி’ பேட்டி ஒன்றில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: எல்லா நாட்டுடனும் வர்த்தக உறவு நீடிக்க வேண்டும் என்று தான் பாக். விரும்புகிறது. இடையே பகை உணர்வு நீடிப்பதால் அந்நாட்டுடன் குறைந்த…

Read More

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்- மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்- மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, “தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பேணிக்காக சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும்…

Read More

கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!

கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!

கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய பொதுமக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 11 லட்சத்து 66 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய கோவா கவர்னர் பி எஸ் ஸ்ரீதரண் பிள்ளை, “கோவா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கோவா மக்கள் ஆகியோரின் உதவியுடன் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது. நாம் அன்றாட இயல்பு நிலைமைக்கு திரும்பியுள்ளோம்” என்று கூறினார்.

Read More

மாவட்டங்கள்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்கள்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொரோனா தொற்று பரவலால் புத்தக கண்காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை புத்தகக்காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில்…

Read More

காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சையில் நடைபெற அரசு விழாவில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றேன். 23 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. ரூ. 1366- கோடிக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. காவிரி மண்ணுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் என்றும் துணையாக இருப்பேன். காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி; காவிரி இறுதி தீர்ப்பை பெற்று…

Read More

இளவரசருக்காக எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

இளவரசருக்காக எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும். மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? காங்கிரசை கட்டுப்படுத்தும் குடும்பம், பஞ்சாப் மீதான பழைய…

Read More

மக்களை பிரிப்பதும் கொள்ளையடிப்பதும்தான் காங்கிரசின் கொள்கை: பிரதமர் மோடி தாக்கு

மக்களை பிரிப்பதும் கொள்ளையடிப்பதும்தான் காங்கிரசின் கொள்கை: பிரதமர் மோடி தாக்கு

70 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு வரும் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. உத்தரகாண்டின் அல்மோரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினர். பிரதமர் மோடி பேசியதாவது:- உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அங்கு பாஜக மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் எங்களை விட மக்கள் உறுதியாக உள்ளனர். நல்ல நோக்கங்கள் கொண்டவர்களை வாக்காளர்கள் ஒருபோதும் கைவிட…

Read More

“திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்” – பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்” – பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் கூறினார். ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர்,அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களையும், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்குமாறு அதிமுகவினரை கேட்டுக்கொண்டார். சட்ட மன்ற தேர்தலில் நழுவ விட்ட வாய்ப்பை நகர்ப்புற தேர்தலில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை…

Read More
1 42 43 44 45 46 181