அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

’அமைதி மற்றும் வளர்ச்சிநிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். கருத்தரங்கள் அமெரிக்கா – சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். இம்ரான்கான் பேசுகையில், பனிப்போர் நோக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன. இந்த குழுக்கள் உருவாகுவதை தடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். எனென்றால், எந்த குழுக்களுடனும் நாம் இணையக்கூடாது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் சிறந்த உறவு கொண்டுள்ளது. அந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அதிகரித்து வரும் விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது’ என்றார்.

Read More

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது.  இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது.  இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.  புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவத்’ என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். …

Read More

“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” – ப.சிதம்பரம் விமர்சனம்

“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” – ப.சிதம்பரம் விமர்சனம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில்…

Read More

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

Read More

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் – பிரதமர் மோடி

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் – பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவாகிறது. புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் அருகே  இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.  இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு பயன்படும். இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட…

Read More

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி  உள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில்  ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது. இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும்  ரத்து செய்யப்படும் என்று…

Read More

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை ஐகோர்ட்டின்  50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார். இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Read More

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை: இரண்டாவது நாளாக முதலமைச்சர் நேரில் ஆய்வு

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை: இரண்டாவது நாளாக முதலமைச்சர் நேரில் ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில்  வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள்  நீரில் ஊர்ந்து செல்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் இன்று நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை,…

Read More

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு  அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை; இப்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது…

Read More

டிச.8-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – பொன்முடி அறிவிப்பு

டிச.8-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – பொன்முடி அறிவிப்பு

பாலிடெக்கினிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கானத் தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த தேர்வு முதலில் 129 மையங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.  தற்போது அந்த தேர்வை சுமார் 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும், அந்தந்த மாவட்டத்திலேயே., 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான அந்தத் தேர்வு மையம் அமையும். ஆகவே, இது நடக்குமா? நடக்காதா? என்ற என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில்., அதனை எல்லாம் மீறி வருகின்ற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி இந்த பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நடைபெறும். டிஆர்பி மூலமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வன்னியர்களுக்கான…

Read More
1 45 46 47 48 49 181