ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா…
Read More








