யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி. சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா. அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும்,…

Read More

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன. ஈழ அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள…

Read More

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
1 45 46 47