கடந்தமார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. மொழிமற்றும் கலாச்சாரமையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்கு மானநடுவம் அமைப்புக்களுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்தது. ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் டீநடடநஎடைட நநகரில் தங்கியிருந்து இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில் டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசைஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி ,அவர்களின் பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக்…
Read More