காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் – அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல் தமிழ் டிரஸ்டி ஸ்ரீ வெங்கட்ராமன கனபாடிகளிடமிருந்து கேட்டு கண்டு … அனைவரோடும் பகிரவும்

Read More

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயணக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அமெரிக்கர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகளில் கனடாவில்தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட தகுதியான வயது வந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு…

Read More

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது….

Read More

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த  சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறுவதில்…

Read More

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தன்வந்தரி பூஜை – அபிஷேகம் -அர்ச்சனை -ஆஷிர்வாதம்

தன்வந்தரி பூஜை – இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் பூஜை செய்யப்பட்டது !! சமுந்திரத்தை கடைந்தபோது அமிர்த கலசத்தை கொண்டுவந்த கடவுள் தான் தவந்தரி பகவன். ஆதி வைத்யர் (டாக்டர்) என்று கருதப்படும் தன்வந்தரி மகா பிரபு…உயிர் கொடுப்பது, மறு வாழ்வளிப்பது மற்றும் ஆரோக்கியமும் அருள்கிறார் !! உங்கள் வீட்டில் பூஜை நடக்கிறது என்று கருதி உங்கள் குடும்பத்தினருடன் பக்தியுடன் இந்த வீடியோவில் காட்டப்படும் முழு பூஜையையும் பாருங்கள் மற்றும் அனைவருடனும் பகிரவும் !! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும் உங்கள் கேள்விகளுக்கும் & தினமொரு தார்மிக செய்தி உங்களின்…

Read More

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

கொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் !! 23ஆம் தேதி தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை & அபிஷேகத்துடன் நடத்தப்படும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் !! தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் !! இந்த பிரார்த்தனை விவரத்தை அனைவரோடும் பகிர்ந்து பயனடய செய்யுங்கள் !! இந்த நன்னாளில் பிராமண தானம் / அன்ன தானம் /…

Read More

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான ஓங்காரநந்த ஸ்வாமி 62,மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில்…

Read More

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் வர 30 நாட்களுக்குத் தடைவிதித்து கனடா அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வருவதற்கு தடை விதித்துள்ளன. தற்போது இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் அடுத்த 30 நாட்களுக்கு வருவதற்குத் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு பிறப்பித்த நீண்ட நாட்கள் தடையாக இது அமைந்துள்ளது. அதேசமயம், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் கனடா அரசு விதிக்கவில்லை….

Read More

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல்…

Read More

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார். அனைத்து மேலைநாடுகள்போல முதலில் தடுப்பு மருந்துகள் முதல்நிலை நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவில் நேற்று தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கிவிட்ட நிலையில் இன்று கனடாவில் 89 வயதான மூதாட்டி ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர். கிசேல் லெவெஸ்க் என்ற இந்த மூதாட்டிக்கு தற்போது…

Read More
1 2 3 4 5 28