கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்
மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள்,…
Read More









