கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

– பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: நவம்பர் 05,  2021 18:19 PM திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் மேலும் 314- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 01 ஆயிரத்து 835- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,048- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 7,085- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 435- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை…

Read More

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு  அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை; இப்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது…

Read More

ஆர்யன் கான் அப்பாவி, அவரிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை – சாம் டிசோசா தகவல்

ஆர்யன் கான் அப்பாவி, அவரிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை – சாம் டிசோசா தகவல்

பதிவு: நவம்பர் 04,  2021 18:40 PM மும்பை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. எனவே ரூ.25 கோடி பேரம் தொடர்பாக போலீசார் சாம் டிசோசாவிடம் விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில்…

Read More

கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.  தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல்…

Read More

டிச.8-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – பொன்முடி அறிவிப்பு

டிச.8-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – பொன்முடி அறிவிப்பு

பாலிடெக்கினிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கானத் தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த தேர்வு முதலில் 129 மையங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.  தற்போது அந்த தேர்வை சுமார் 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும், அந்தந்த மாவட்டத்திலேயே., 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான அந்தத் தேர்வு மையம் அமையும். ஆகவே, இது நடக்குமா? நடக்காதா? என்ற என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில்., அதனை எல்லாம் மீறி வருகின்ற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி இந்த பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நடைபெறும். டிஆர்பி மூலமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வன்னியர்களுக்கான…

Read More

’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு’நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர்…எனது கட்சியில் இணையுங்கள்’ – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சிமாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நீங்கள் (நரேந்திரமோடி) இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்… வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது….

Read More

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

தலைநகர் டெல்லியை டெங்கு காய்ச்சல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்து 530 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது 4 ஆண்டுகளில் அதிகபட்ச பாதிப்பு ஆகும். டெல்லியில் டெங்குவால் நேற்று முன்தினம் 5 பேர் இறந்திருக்கின்றனர். இதனால் இக்காய்ச்சலால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவும் 4 ஆண்டுகளில் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளியன்று எப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும். தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல்…

Read More

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்….

Read More
1 71 72 73 74 75 256