உக்ரைனை நேடோவில் இணைக்க அழுத்தம் கொடுக்க மாட்டோம்: ஜெலன்ஸ்கி
நேடோ அமைப்பில், உக்ரைனை சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் அழுத்தம் கொடுக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: நேடோ அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் வலியுறுத்த மாட்டோம். அவர்களிடம் தானம் பெறும் நாட்டின் தலைவராக இருக்க விரும்பவில்லை. நேடோ அமைப்பு,உக்ரைனை உறுப்பினராக சேர்த்து கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
