காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டில்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு கூறியிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
