தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 366 ஆக குறைவு ; 1,013 பேர் நலம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப். 27 ம் தேதி) 439பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்.28ம் தேதி) பாதிப்பு 366 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 55,994 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 366 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,49,373 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,43,98,334 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 209 பேர் ஆண்கள், 157 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,13,276 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,36,059 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,013 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,05,624 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு காரணமாக ஒருவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,004 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
