யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!
பாடகர் யேசுதாஸ் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு மோடி இன்று (ஜன.,10) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கே.ஜே.யேசுதாசுக்கு அவரது 80 வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ்பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.


