10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது.
இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.