நிலவில் 50 ஆண்டுகளில் நாசா செய்யாததை சந்திரயான்-1 மூலம் சாதித்த இஸ்ரோ – அது என்ன தெரியுமா?

இஸ்ரோவின் விண்வெளிப் பரிசோதனைகளில் மிகவும் சிக்கலான சோதனைகள் என்று சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.

பல நூறு கோடி ரூபாய் செலவழித்து இவ்வளவு பெரிய திட்டங்களைத் தொடரும் இஸ்ரோ என்ன சாதிக்கும்?

சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 மூலம் இஸ்ரோ என்ன சாதனைகளை நிகழ்த்தியுள்ளது?

சந்திரயான்-1 ஏவப்பட்ட போது, இஸ்ரோ ஆர்பிட்டரை மட்டுமே ஏவியதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆர்பிட்டருடன், மூன் இம்பாக்ட் ப்ரோப் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் (Moon Impact Probe) ஒன்றும் ஏவப்பட்டது.

சந்திரயான்-1ல் இருந்த ஆர்பிட்டர் சந்திரனைச் சுற்றி வந்த போது, ​​நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழவைக்கப்பட்டது.

அந்த உபகரணத்தின் நான்கு பக்கங்களிலும் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மூவர்ணக் கொடி பத்து ஆண்டுகளுக்கு முன்பே நிலவை அடைந்ததாக கூறப்படுகிறது.

சந்திரயான்-1-ன் பணிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பத்து மாதங்கள் மற்றும் ஆறு நாட்களுக்குள், சந்திரயான்-1 ஆர்பிட்டரில் இருந்து சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.

சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு ‘நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை’ அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது. ஆனால், அது ஒரு லேண்டரைப் போன்றது அல்ல.

அதாவது அது மெதுவாக, பாதுகாப்பாக நிலவில் இறங்காது.

சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு ‘நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை’ அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது. ஆனால், அது ஒரு லேண்டரைப் போன்றது அல்ல.

அதாவது அது மெதுவாக, பாதுகாப்பாக நிலவில் இறங்காது. மாறாக நேரடியாக அதே நேரம் வேகமாக நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கும் உபகரணமாக இருந்தது. சந்திரயான்-1 இல் பொருத்தப்பட்ட இந்த உபகரணம் நவம்பர் 18, 2008 அன்று 100 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இது 25 நிமிடங்களில் சந்திரனின் மேற்பரப்பைத் தொட்டது.