நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சர்ச்சை கருத்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்சிநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ.விலிருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசாரிடம் ஒப்படைக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்றது.
இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மீது நியாயமான சுதந்திரமான விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மனுவிசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லித் தலைமையிலான பெஞ்ச், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
