ஆக.19-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பா? திமுகவில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் இதனை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, “நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்” என்று மட்டும் பதில் அளித்தார்.

“தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்” என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். ஆனாலும், துணை முதல்வர் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? திமுகவில் என்ன நடக்கிறது?