இந்தியா பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு பும்ரா, பாண்ட்யா சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. புவனேஷ்வரின் மூன்றாவது ஓவரில் இமாம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த புவனேஷ்வர்…
Read More









