இலங்கையில் அமைச்சரின் எம்.பி. பதவி பறிப்பு ஏன்? என்ன நடந்தது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஹாபிஸ் நசீர் அஹமட், உட்பட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் தீர்மானத்தை மீறி, இலங்கை அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனையடுத்து, அவர்கள் மூவரும் கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக – முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்ததோடு, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தது. இதனையடுத்து ஹாபிஸ் நசீர் தவிர்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், மக்களின் நலன் கருதி வரவு –…
Read More









