அரசியலுக்கு எதிராக சாதியை கையில் எடுக்கிறதா ‘இந்தியா’ கூட்டணி?
மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று பிகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நிதீஷ்குமார் அரசு வெளியிட்டவுடன் ராகுல் காந்தி ட்வீட் செய்து, ’பிகாரில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மக்கள் தொகை 84 சதவிகிதம் என்று சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது’ என்று எழுதியுள்ளார்.
“மத்திய அரசின் 90 செயலர்களில், 3 பேர் மட்டுமே ஓபிசிக்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5 சதவிகிதத்தை மட்டுமே கையாளுகிறார்கள்.
எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’ ஆட்சிக்கு வந்தால், தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதியை ஆட்சியில் இருந்து அகற்ற, 28 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ தனது தேர்தல் பிரசாரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாகப் பயன்படுத்தும் என்பது தெளிவாகிறது.
எதிர்க்கட்சி கூட்டணி மத்திய அரசை குறிவைக்க, ஓபிசி பிரதிநிதித்துவப் பிரச்சனையை எழுப்பும். 2024 தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ அரசியலை தோற்கடிக்க இது ஒரு ஆயுதமாக அமையும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடி, ஜேடியு மற்றும் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் உள்ளது.’இந்தியா’ கூட்டணிக்கு இது ஒரு நல்ல செய்தி
