மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்
முன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது. இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில்…
Read More









