வடக்கில் இன்னமும் புலிகள் உள்ளனர்! முன்னாள் எம்.பி. அஸ்வர்

வடக்கில் இன்னமும் புலிகள் உள்ளனர்! முன்னாள் எம்.பி. அஸ்வர்

வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி

இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் வெற்றிகரமாக வடமராட்சியில்லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு விமானங்கள்இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை, இலங்கையின் படையினருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று இலங்கையின் படைத்தளபதி ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்குணரட்ன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலில்இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ஜூன் 4ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.

Read More

நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனையைபார்க்கும் போது, கடந்த பொதுத்தேர்தலில் அவருக்கு வேட்பு மனு வழங்காத ஜனாதிபதிமைத்திரிபாலவின் முடிவை நியாயப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதெரிவித்துள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக சுதந்திரமானது என்று அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..

Read More

பேஸ்புக்கில் பொலிஸ்மா அதிபரின் பெயரில் பெண்களை ஏமாற்றிய நபருக்கு விளக்கமறியல்

பேஸ்புக்கில் பொலிஸ்மா அதிபரின் பெயரில் பெண்களை ஏமாற்றிய நபருக்கு விளக்கமறியல்

நியுசிலாந்தில் இருந்து கொண்டு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில்பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த நபரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டமாத்தறையைச் சேர்ந்த சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார். சந்தேகநபர் தொடர்பில் கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வுபிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நியுசிலாந்தில் இருந்து இலங்கை வந்தஇவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதேவேளை பொலிஸ் சீருடை மீது தனக்கு இருந்த அதிக ஆசை காரணமாகவே தான் இவ்வாறுசெய்ததாக சந்தேகநபர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணையின் போதுதெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஐ.தே.க ஆண்டு நிறைவில் பங்கேற்பேன் – துமிந்த திஸாநாயக்க

ஐ.தே.க ஆண்டு நிறைவில் பங்கேற்பேன் – துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் துமிந்த தெரிவித்துள்ளார். இந்த அழைப்பினை நிராகரிப்பதற்கு எந்தவிதமான காரணமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கிளிநொச்சியில் சுமார் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! இருவர் கைது

கிளிநொச்சியில் சுமார் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! இருவர் கைது

கிளிநொச்சியில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். வடமாகாணத்திற்கு எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளதால் வட பகுதியில் போதைப்பொருள் பாவனையினை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களத்தின் விசேட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளரின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Read More

கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் முதியவர்!

கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் முதியவர்!

தமது வாழ்நாள் பூராகவும் பெற்ற பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்து மாடாய் தேய்ந்து போன ஒருவர் இறுதியில் யாருமற்ற நிலையில், நடுத்தெருவில் நிற்கும் அவலம் மிகக்கொடுமையானது. இலங்கையில் அண்மைக்காலங்களில் பல பெற்றோர்கள் தான் பெற்ற பிள்ளைகளாலேயே நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றனர். அந்தவகையில் காலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தனது உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போவோர், வருவோரை பார்த்த வண்ணம் இருந்துள்ளார்.

Read More

இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!

இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை வைத்திருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மகிந்த இணங்கினார் என்பதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – கெஹெலிய

மகிந்த இணங்கினார் என்பதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – கெஹெலிய

முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் போர் குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இணங்கியிருந்தார் என்பதை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், போர் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம், மனித உரிமை மீறல்களை விசாரிக்கவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியதாக தற்போதைய அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Read More
1 419 420 421 422 423 425