நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் – பிரதமர் மோடி

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் – பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவாகிறது. புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் அருகே  இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.  இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு பயன்படும். இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட…

Read More

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி  உள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில்  ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது. இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும்  ரத்து செய்யப்படும் என்று…

Read More

கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்…!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்…!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4,200 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இது கடந்த செப்டம்பர் இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது இருமடங்கு ஆகும். இந்த நிலைமை நீடித்தால் அடுத்த ஆண்டு வசந்த காலத்துக்கு முன் (மார்ச்-ஜூன்) ஐரோப்பாவில் 7 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும், இதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பா மற்றும் மத்திய…

Read More

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம்

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம்

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக…

Read More

ஏன் 3 விவசாய சட்டங்கள் ரத்து? பிரதமர் மோடி விளக்கம்

ஏன் 3 விவசாய சட்டங்கள் ரத்து? பிரதமர் மோடி விளக்கம்

குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார்.  அப்போது மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து  3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்?  பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார் அதில், வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்….

Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Read More

இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பலன் தரும்- சவுமியா சுவாமிநாதன்

இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பலன் தரும்- சவுமியா சுவாமிநாதன்

இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக எதிர்ப்பு சக்தி தரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறி உள்ளார். பதிவு: நவம்பர் 16,  2021 11:03 AM புதுடெல்லி கொரோனா தொற்றின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவைத் தாக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள்  அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. பல காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  ஆனால் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை….

Read More

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை ஐகோர்ட்டின்  50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார். இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Read More

மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்: அகற்றும் பணி தீவிரம்

மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்: அகற்றும் பணி தீவிரம்

காற்றழுத்த மண்டலம் நேற்று சென்னை அருகே கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக மீட்பு படையினர் நேற்று இரவே மழை நீரை அகற்றும் பணியில் அனைத்து பகுதிகளிலும் களம் இறங்கினார்கள். விடிய விடிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. என்றாலும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு சென்னை நகரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது புறநகர் பகுதிகளில் தான் மிக மிக அதிக பாதிப்பு காணப்பட்டது. ஆனால் இந்த தடவை சென்னையில் அனைத்து இடங்களுமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. குறிப்பாக மத்திய சென்னை பகுதிகளிலும் அதிக…

Read More

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார். மேலும் அவர் கூறும் போது, “  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல்…

Read More
1 70 71 72 73 74 425