கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார். கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார். தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்….

Read More

‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்காக மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக நிபுணர் குழு கூடியது. அதில், தற்போது ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்…

Read More

உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

உலகம் செய்தி  பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்துவரும் ஹாரி, தற்போது தாத்தா பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ளார். கடந்த ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகியோர் குழந்தை ஆர்ச்சியுடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கு தொழில் செய்து வந்த அவர்கள், சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய கருத்து பிரிட்டன் அரச குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தில் மேகன் மார்கலிடம் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர்….

Read More

தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

தமிழக தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அவசரமாக டில்லி கிளம்பி சென்றுள்ளனர். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. தமிழக டிஜிபி திரிபாதி, அரசு உள்துறை இணை செயலர் முருகன் ஆகியோர் காலை ஏர் இந்தியா விமானத்தில் டில்லி கிளம்பி சென்றனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், உள்துறை செயலர் பிராபகர் இருவரும் தனியார் விமானம் மூலம் டில்லி கிளம்பி சென்றனர். சமீபத்தில் தேர்தல் முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் டில்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், இவர்கள் டில்லி சென்றுள்ளதாக தெரிகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முக்கிய ஆலோசனை நடத்த அதிகாரிகள் டில்லி…

Read More

உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை

உலகம் செய்தி  20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது. அதே சமயத்தில் உலகின் பணக்கார நாடுகளுக்கு அதிவேகத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் உலகின் சக்திவாய்ந்த…

Read More

பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை

பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை

பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் வரிவசூலால் ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்து உள்ளார்.

Read More

நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

நக்சல்கள் பிடியில் சிக்கியிருந்த சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் இன்று விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3-ம் தேதியன்று சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையின் கோபுரா பிரிவினர் அடங்கிய கூட்டுப் படை வீரர்கள், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 31 வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தங்கள் பிடியில் இருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டுமெனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என…

Read More

ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை, வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையில், கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஓட்டு எண்ணும் மையங்களை மிகுந்த…

Read More

சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதற்காக, சரத்குமாரின் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்துமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியை காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் கடனாக…

Read More

ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருப்பதாக முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும். பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம்…

Read More
1 97 98 99 100 101 425