இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. “அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம். தமிழ்நாட்டின்…
Read More