ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜய பாஸ்கர்தான்: ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முடிவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ”ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றத்தான் இந்த தர்மயுத்தம். ஜெயலலிதா மரணமடைந்த நாளில், மாலை 4.30 மணிக்கே இறந்ததாக, வீட்டில் இருந்த எனக்கு 6.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. நான் மருத்துவமனை சென்று கேட்ட போது, உறுதி செய்யப்படவில்லை என கூறி, நேரம் கடத்தி 11.30 மணிக்கு…
Read More









