ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்

ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து…

Read More

கோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம்

கோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம்

40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்களும், பா.ஜனதாவுக்கு 13 இடங்களும், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்ததால் அந்த கட்சி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா…

Read More

உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய முஸ்லிம்கள்

உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய முஸ்லிம்கள்

உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம்களும் வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. அக்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளதால் இவ்வாறு கூறப் படுகிறது. உ.பி.யில் முஸ்லிம்கள் சுமார் 21 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் இந்த முறை பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளையே அதிகம் குறி வைத்திருந்தன. பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் கூட நிறுத்தப்படவில்லை. எனினும் இக்கட்சிக்கு சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால், முஸ்லிம்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பாஜக வசம் 73 இடங்கள் உள்ளன இதற்கும் முஸ்லிம்கள் ஆதரவு காரணமாக இருந்தது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய முஸ்லிம் பெண்கள்…

Read More

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு…

Read More

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வற்புறுத்துவேன் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Read More

பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும், அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒருமாதிரி பட்ஜெட்டை வெளியிடுவது வழக்கம். 15-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் இன்று வெளியிட்டனர். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டாக்டர் ராமதாஸ் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:- தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் நிர்வாக கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அரசு திட்டங்களில் ‘அம்மா’ என்ற பெயர் அகற்றப்படும் வரும் காலங்களில் எந்த அரசு திட்டத்துக்கும் தனி மனிதர்கள் பெயர் சூட்டப்பட மாட்டாது. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து பள்ளிகளும் கேந்திரிய பள்ளிகளுக்கு இணையாக தரம்…

Read More

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக போராட்டம்: மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக போராட்டம்: மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் நேற்று 3-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தி னர். கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(21) உயிரிழந்தார். ஜெரோன்(27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமேசுவரம் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக் குப் பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றபோது பெற் றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்தனர். இலங்கை…

Read More

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சசிகலாவின் தலைமையை எதிர்த்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அம்மா கல்வியகம்’ (www.ammakalviyagam.in) எனும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன், அதிமுகவின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதனால் உருவாக்கப் பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இணையதள வடிவமைப்பு முடிந்து, ஓ.பன்னீர் செல்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இணையதளத்தில், பிளஸ் 2 மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும்…

Read More

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்ய, சசி கலாவின் தலைமையில் ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ள தாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி காலியாக இருப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி யில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதிமுகவில் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் தனித் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் அறி விப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்,…

Read More

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை படுகொலை செய்தது தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது, ”தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின்…

Read More
1 163 164 165 166 167 181