ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரமாணப் பத்திரங்களாக்கி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம்….

Read More

ஆர்.கே.நகரில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும்: கங்கை அமரன்

ஆர்.கே.நகரில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும்: கங்கை அமரன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆர்.கே.நகரில் அந்த மாற்றம் பாஜக மூலம் ஏற்படும் என்று அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் இசையமைப்பாளரும், பாஜக வேட்பாளருமான கங்கை அமரன் கூறியதாவது: பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தன. பாஜகவில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆர்.கே.நகரில் அந்த மாற்றம் பாஜக மூலம் ஏற்படும். தமிழக பாஜகவின் எழுச்சிக்கான ஆரம்பமாக இந்தத் தேர்தல் அமையும். ஆர்.கே.நகரில் எனது வெற்றி உறுதி. சட்டப்பேரவையில் எந்த எண் கொண்ட இருக்கையில் அமரப் போகிறேன் என்று…

Read More

“மாதவனை கண்டு கொள்ளாதீர்கள்” தனிக்கட்சி தொடங்கியதால் கடும் அதிர்ச்சி கணவர் மீது தீபா பாய்ச்சல்

“மாதவனை கண்டு கொள்ளாதீர்கள்” தனிக்கட்சி தொடங்கியதால் கடும் அதிர்ச்சி கணவர் மீது தீபா பாய்ச்சல்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் தினமும் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு திரண்டு அரசிய லுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து விடுத்த அழைப்பை ஏற்ற தீபா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்தார். தீபாவை தேடி தினமும் வீட்டுக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களை அவரது கணவர் மாதவனே சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வந்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு  வந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தீபா அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக வெற்றி…

Read More

அரசியலில் எழுச்சி பெற குலதெய்வம் கோயிலில் ஓ.பி.எஸ். வழிபாடு

அரசியலில் எழுச்சி பெற குலதெய்வம் கோயிலில் ஓ.பி.எஸ். வழிபாடு

இரட்டை இலை சின்னத்தை கைப் பற்ற வேண்டியும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற வேண்டியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வமான வனப்பேச்சியம் மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்தார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அசுவமேத பூஜை நடத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகின் றனர். இதனிடையே ஜெயலலி தாவின் அண்ணன் மகள் தீபாவும் தனியாக பேரவையை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். இந் நிலையில், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஏப்.12-ம் தேதி…

Read More

‘நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்’ : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

‘நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்’ : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இளைஞரை விசாரித்த நீதிபதி, ‘நீதிமன்றத்துடன் விளை யாடினால் சிறைக்கு அனுப்புவேன்’ என எச்சரித்தார். ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் கிராமம் முத்துகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது: நான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மகன். கடந்த15.2.85-ல் பிறந்தேன். ஈரோடு காஞ்சி கோவிலைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு 1986-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்து கொடுத்தனர். எனது வளர்ப்புத் தாய் மற்றும் தந்தையுடன் ஈரோட்டில் வசித்து வரும் நான் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறேன். போயஸ் தோட்டத்தில்…

Read More

டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை

டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை

டிடிவி தினகரன் மீது  ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விளக்குவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்தோம். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை…

Read More

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளாக, மொத்தம் 107.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். தமிழக பட்ஜெட் 2017 – 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோமீட்டர் நீளத்திற்கு தொடங்கப்பட்ட முதற்கட்டப் பணிகளில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான 21 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட…

Read More

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் மீது காலணி வீசிய இளைஞர் சாலமன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை…

Read More

ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன் என்று மதுசூதனன் சூளுரைத்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்’ என்று அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”நான் ஆர்.கே.நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தொகுதி மக்களை நன்கறிவேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன்” என்று கூறினார். மதுசூதனன் 1991-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அப்போதைய…

Read More

9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் தலைமை தேர்தல் கமி‌ஷனரை இன்று(புதன்கிழமை) சந்திக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி,  நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் என 9 பேர் கொண்ட குழுவும் செல்கின்றனர். இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் கமி‌ஷனரை பிற்பகல் 12 மணி அளவில் சந்திக்கிறார். சசிகலா நியமனம் செல்லாது இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வின் ‘அவைத்தலைவர்,…

Read More
1 161 162 163 164 165 181